சூழல்: சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை வினாடி வினா என்பது தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் முக்கிய முயற்சியாகும். இது மாணவர்களில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, காலநிலை பற்றிய புரிதல் மற்றும் நிலைத்த வாழ்வியல் சிந்தனையை வளர்க்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதர்கள், இயற்கை மற்றும் பூமி ஆகியவற்றின் பரஸ்பர உறவுகளை மாணவர்கள் ஆழமாக அறிந்து பசுமையான மற்றும் நிலைத்த எதிர்காலத்திற்கான செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிப்பதே இதன் நோக்கம்.
ஆன்லைன் முதல் சுற்று, மாவட்ட சுற்று, மண்டல இறுதிச்சுற்று மற்றும் சென்னை மாநில இறுதிச்சுற்று என பல்வேறு நிலைகளைக் கொண்ட இந்த வினாடி வினா போட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களை அறிவு, ஆர்வம் மற்றும் பொறுப்புணர்வின் பயணத்தில் ஈடுபடுத்துகிறது.
யார் பங்கேற்கலாம்?
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.
குழு அமைப்பு
ஒவ்வொரு குழுவும் ஒரே பள்ளியை சார்ந்த 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை எந்த வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியும் அதிகபட்சம் ஐந்து குழுக்களைப் பதிவு செய்யலாம்.


தலைப்புகள்
இந்த வினாடி வினா சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை தொடர்பான பொதுத் தலைப்புகளை மையமாகக் கொண்டு நடைபெறும். அது மட்டுமல்லாமல் கீழ்க்காணும் தலைப்புகளில் இருந்தும் கேள்விகள் இடம் பெறலாம்.
· இயற்கை வளங்களின் பாதுகாப்பு
· காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமடைதல்
· உயிரியல் பல்வகைமை மற்றும் வனவிலங்குகள்
· புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் கழிவு மேலாண்மை
· நிலைத்த வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நடைமுறைகள்

பரிசுகள்
மாநில அளவில் முதலிடத்தை பெற்ற குழு : ₹50,000/team
மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற குழு: ₹30,000/team
மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற குழு: 20,000/team
இறுதி சுற்றுக்கு தேர்வாகிய மற்ற போட்டியாளர்கள்: ₹5,000/team
அனைவருக்கும் டிஜிட்டல் பங்கேற்பு சான்றிதழ்கள் மற்றும் பல நிலைகளில் தகுதி பெற்ற அணிகளுக்கு சிறப்பு பரிசுப் பொருட்கள்!

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், soozhal@tackon.org என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

































































